தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை கடல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5ஆவது தீடைப் பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
இந்தச் சடலம் தொடர்பாக கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
தலைமன்னார் பொலிஸார் தீடைப்பகுதிக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்ட தோடு, மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மன்னார் மாவட்டபொது வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்