இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமரின் பூதவுடல், தற்சமயம் ஹொரணையில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரநாயக்க நேற்று முன்தினம் தமது 83வது வயதில் காலமானார்.
காலஞ்சென்ற முன்னாள் பிரதமருக்கு நாடாளுமன்ற கௌவம் அளிக்கும் வகையில், அவரது பூதவுடல் நேற்று நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அவரது இறுதி கிரியை எதிர்வரும் 31ஆம் திகதி ஹொரனையில் சகல அரச மரியாதையுடன் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மறைவை ஒட்டி எதிர்வரும் 30ஆம் திகதி தேசிய துக்க தினமாக உள்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.