சட்ட நடவடிக்கைக்கு தயாராகின்றது கபே

261 0

312272773cafeஉள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கும், எல்லை நிர்ணய குழுவுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்படி நிறுவனங்கள் தேர்தலை பிற்போடும் நடவடிக்கைகளில் ஈடுபடுதற்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம்  அமைச்சிடம் கையளிக்கப்படவிருந்தபோதும், குறித்த அறிக்கை கையளிக்கப்படவில்லை.

2016 மார்ச் மாதம் அறிக்கையை கையளிப்பதாக எல்லை நிர்ணய குழு முதலில் குறிப்பிட்டிருந்தது.
பின்னர் ஏப்ரல் 30, ஓகஸ்ட் 31 மற்றும் ஒக்டோபர் 31 என அறிக்கை கைளிக்கும் தினங்கள் அறிவிக்கப்பட்டபோதும் அவை கையளிக்கப்படவில்லை.

இதையடுத்து, நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 15 என அடுத்தடுத்து அறிக்கை கையளிப்பு பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், டிசம்பர் 27ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டநிலையில், அன்றும் பிற்போடப்பட்டுள்ளதாக கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.