சவூதிக்கு பணிபெண்ணாக சென்ற மற்றுமொருவர் இறந்தார்

352 0

srilanka-saudi-arabiaசவூதி அரேபியாவிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்று சித்திரவாதைகளுக்கு உள்ளாகி மரணமாக பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் 44 வயதுடையவர் எனவும் இவர் கடந்த நொவம்பர் மாதம் சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பணிப்புரிந்த வீட்டின் உரிமையாளரினால் கொடூரமான சித்திரவாதைகளுக்கு உட்பட்டமையை தொலைபேசியின் ஊடாக தனக்கு தெரியபடுத்தியிருந்ததாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் முறையிட்ட போதிலும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.