நிதி மோசடிகள் விசாரணை அறிக்கைகள் ஜனதிபதியிடம்

280 0

625-500-560-350-160-300-053-800-900-160-90பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள, மூன்று முறைப்பாடுகள் குறித்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகளே கையளிக்கப்படவுள்ளன.

இந்த அறிக்கைகளை ஜனாதிபதியிடம் விரைவாக கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்ட ஆறு அறிக்கைகள் ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாரிய நிதி மோசடிகள் குறித்து இந்த ஆணைக்குழுவுக்கு ஆயிரத்து 600 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் 357 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.