பெண்களின் மேலதிக விடுமுறை மீது கவனம் செலுத்தும் அமைச்சர்!

282 0

6187720971464481858chandrani-bandara2-720x480-720x480கோரிக்கை முன்வைக்கப்பட்டால், இலங்கையில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறையை வழங்க வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவையில் பரிந்துரைக்க தயார் என மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

சீனாவில் பல மாகாணங்களில் அமுலில் இருக்கும் மாதவிடாய் விடுமுறையை இலங்கையிலும் அமுல்படுத்த முடியுமா என ஊடகவியலாள் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தாங்கிக்கொள்ள முடியாத வலி ஏற்படும் பெண்களும் உள்ளனர். நானும் அதே போன்ற பெண் என்பதால், எனக்கு அது நன்றாக தெரியும்.

இதனால், இப்படியான விடுமுறையை வழங்க முடிந்தால், சிறந்தது என்பது எனது நிலைப்பாடாகும் என அமைச்சர் சந்திராணி பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான பெண்களுக்கு சீனாவில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விடுமுறை பெற்றுக்கொள்ள சட்டத்தில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விடுமுறையை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு முன்னர் செயற்பாட்டு ரீதியான பிரச்சினைகள் குறித்து முதலில் கலந்துரையாட வேண்டும் எனவும் மகளிர் விவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.