அம்பாந்தோட்டைத் துறைமுகம் குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக சீனத் தூதுவர் மைத்திரியிடம் கவலை வெளியிட்டார்!

269 0

yi-xiangliangகொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் இரகசியமாக தரகுப் பணம் பரிமாறப்பட்டது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் கூட்டு எதிரணியினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், சிறீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய அம்பாந்தோட்டைத் துறைமுகத்துடன் தொடர்புடைய சில அமைச்சர்கள் சீனாவுக்குச் சென்று தரகுப் பணம் பெற்றுள்ளதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது தொடர்பான சீனாவின் கவலையை சிறீலங்கா ஆட்சியாளரிடம் நேரில் தெரிவித்திருந்தார்.