யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.”எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய மாணவர்களால் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.பாலன் பிறப்பு காட்சியை அரங்கேற்றிய குழைந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் பெற்றோர்களின் மனதினில் ஆழமாக பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
100 க்கும் மேலாக பங்குபற்றிய மாணவர்களுக்கு ஆசிரியர்களால் நத்தார் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு , கிரிஸ்மஸ் தாத்தா குழந்தைகளுக்கான இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்.