பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே தேசிய அரசு தொடரும் – லக்ஸ்மன் யாப்பா

312 0

sadadasdஅடுத்த ஆண்டு முதல் பாராளுமன்ற அமர்வின் போது மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விவாதம் பாராளுமன்றில் இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,குறிப்பாக இந்த விடையம் தொடர்பில் விவாதம் மட்டுமே எடுத்துக்கொள்ளாமல்இது தொடர்பிலான நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அர்ஜுன் மகேந்திரனின் மருமகனுடைய நிறுவனம் விலக்கப்பட்டிருக்க வேண்டும் இருந்தாலும், அது எந்த விதிமுறையின் கீழ் இடம்பெற்றன என தான் அறியவில்லை.அத்துடன் நிச்சயமாக இது தொடர்பில் உரிய தீர்வு விரைவில் எட்டப்படும்.

தொடர்ந்தும் 2017 ஆம் ஆண்டு பொருளாதார நிலையில் முறையான வளர்ச்சியும் அரசியல் இஸ்திரத்தன்மையும் காணப்படுமாயின் தேசிய அரசாங்கம் தொடர்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.