சட்ட விரோதமான ஆயுதங்களுடன் இருவர் கைது

290 0

586535574arrestவெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

மாரவில பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே குறித்த நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடமிருந்து 24 கைக்குண்டுகள், 9 துப்பாக்கிகள், மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதோடு இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.