அரசு அதிகாரிகள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தவிர்க்க உத்தரவு

297 0

_93158104_150708151417_small_gift_624x351_thinkstockபண்டிகை காலத்தில் அரசு அதிகாரிகள் அன்பளிப்பு பொருட்கள் பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது சம்பந்தமான அறி்விப்பு ஒன்றை, அந்த அணைக்குழு, பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.பண்டிகை காலங்களில் வியாபார நிறுவனங்கள் அரச அதிகாரிகளை கவருவதற்காக அன்பளிப்பு பொருட்களை வழக்கமாக வழங்கி வருகின்றன.
இதன் காரணமாக பொது மக்கள் மத்தியில் அரச அதிகாரிகள் சம்பந்தமாக தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த செயல்பாடுகள் ஊழல் மோசடிகளுக்கும் வழி வகுக்குமென்று தெரிவித்துள்ள அந்த ஆணைக்குழு, அன்பளிப்புக்களை பெற்றுகொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அரச அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்துகளை தெரிவித்த ஊழல்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் “டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல்” இலங்கை கிளையின் தலைவர் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ், ஊழல் விசாரணை ஆணைக்குழு எடுத்துள்ள இந்த தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்தார்.
விசேடமாக சுங்கம், வங்கி மற்றும் அரசுத் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு பண்டிகை காலத்தில் வர்த்தக நிறுவனங்களின் முலம் இலட்சக்கணக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர் சட்ட விரோதமான உதவிகளை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் இதனை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இது லஞ்சம் என்று கூறிய வழக்கறிஞர் லக்ஷான் டயஸ், இவ்வாறு அன்பளிப்பு பொருட்களை பெற்றுக்கொள்ளும் அரசு அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மேலும் வேண்டுகோள் விடுத்தார்.