சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது குண்டுவீச்சு தாக்குதல்

273 0

201612282341556195_russian-embassy-in-damascus-shelled-twice-statement_secvpfசிரியா தலைநகர் டமஸ்கஸில் உள்ள ரஷ்ய நாட்டின் தூதரகம் மீது இருமுறை குண்டுவீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ரஷியா, ஈரான் ஆகிய நாடுகளின் துணையுடன் சிரியாவில் வாழும் கிளர்ச்சியாளர்களுக்கு மீது பஷர் அல் ஆசாத் தலைமையிலான அந்நாட்டு அரசு தாக்குதலை நடத்தி வந்தது.ரஷ்ய ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அலெப்போ நகர் முழுவதுமாக அரசு படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சிரியா தலைநகர் டமஸ்கஸில் உள்ள ரஷ்ய நாட்டின் தூதரகம் மீது இருமுறை குண்டுவீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.அதில், ரஷ்ய தூதரகம் மீது இரண்டு முறை இந்த குண்டுவிச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஒன்று தூதரக வளாகத்தில் உள்ள முற்றம் பகுதியிலும், மற்றோன்று தூதரக ஆணையத்தின் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமைதி பேச்சுவார்த்தையை தடம் புரளச் செய்யும் விதம் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.