அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகப்பட்ச விலைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அத்தியாவசியப்பொருட்களுக்கு வெட் எனப்படும் பெறுமதிசேர் வரி விதிக்கப்படாது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாவட்டத்துக்கு மாவட்டம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
இந்தநிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகூடிய விலைகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களுக்கான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை வைத்து சிலர் அரசாங்கத்தை வீழ்த்த முற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வியாபாரிகளுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025