ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினது எச்சரிப்பையும் மீறி, இஸ்ரேல், கிழக்கு ஜெருசலேமில் புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்றத்தை செய்யும் இஸ்ரேலின் திட்டத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்றிருக்காமை முக்கிய நிகழ்வாக அமைந்தது.
எனினும் இஸ்ரேல் அதனை கவனத்தில் கொள்ளாமல் ஆயிரக் கணக்கான புதிய குடியேற்றங்களை அடுத்த வாரம் முதல் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.