தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஏரல் பேரூராட்சி கழக செயலாளர் பொறுப்பில் டி.அசோக்குமார் நியமிக்கப்படுகிறார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.பரமசிவன், ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.மகேஷ் ராஜா,
தென்காசி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த வி.கே. கணபதி, எஸ்.ராதா, எஸ்.ஏ. சேர்மதுரை, கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பி. பத்மராஜா, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வி.ஆர்.ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த எம். செல்லத்துரை ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஏரல் பேரூராட்சி கழக செயலாளர் பொறுப்பில் டி.அசோக்குமார் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.