மயிலிட்டி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்படாதுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்படாதுள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் முக்கிய தளங்கள் இருப்பதாலேயே அவற்றை விடுவிக்க எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால் யுத்த காலத்துக்கு முன்னர் அங்கு இராணுவ முகாம்கள் இருக்கவில்லை.
அவை வளமிக்க விவசாய மற்றும் குடியிருப்பு பகுதிகளாக இருந்தன.
இந்த நிலையில் அவற்றை விடுவித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை திரும்ப உறுதி செய்ய வேண்டும் என்று டக்ளஸ் தேவாநந்தா கோரியுள்ளார்.