இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் நியமனம்

223 0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக எரிக் கார்செட்டி பதவி வகித்து வருகிறார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின், பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார். அந்நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய அதிபர் ஜோ பைடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா தடுப்புக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியை அறிவிப்பது பற்றி பைடன் பரிசீலனை மேற்கொண்டு வருகிறார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது