முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பு – விக்னேஸ்வரன் மறுப்பு

265 0

tamil_daily_news_97821772099வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மறுத்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் வடக்கில் காணிகளைப் பெற்ற 4 ஆயிரத்து 307 குடும்பங்களில், 73 சதவீதமானவர்கள் முஸ்லிம்களாவர்.

அதேநேரம், 2015ஆம் ஆண்டு வரையில் 26 ஆயிரத்து 668 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்கான விண்ணப்பத்துள்ளன.

இந்த எண்ணிக்கையில் இதுவரையில் 24 ஆயிரத்து 40 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 2 ஆயிரத்து 801 குடும்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளன.

அதேநேரம் தெற்கிலும், புத்தளத்திலும் குடியேறியுள்ள பல முஸ்லிம்கள் வடக்கில் மீள்குடியேற விண்ணப்பிக்கவில்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.