மலையக பகுதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

209 0

மலையக பகுதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (09) பல பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டன.

இதில் கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட கூம்மூட் கிராம சேவகர் பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட தலவாக்கலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் கிலோனாமோரா தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 97 சதவீமானவர்கள் இன்றைய தினம் சினோபார்ம் முதல் டோஸ் தடுப்பூசியினை போட்டுக்கொண்டதாக கொட்டகலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சௌந்தரராகவன் தெரிவித்தார்.

குறித்த தோட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 116 பேர் வசித்து வருகின்றனர். இதில் 113 பேர் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாகவும் இதில் இந்த தோட்ட மக்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் ஆர்வமாகவும் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்டோனிகிளப் கிளினிக்கில் சுமார் 522 பேருக்கும் தலவாக்கலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் 612 பேருக்குமாக மொத்தம் 1,134 பேருக்கு சினோபார்ம் முதல் டோஸ் தடுப்பூசியை இன்று (09) பெற்றுக் கொடுக்க நடவடிக்கைள் மேற்கொண்டிருந்தாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.