மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 12 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் இன்று (09) உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவர் கொல்லப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசரணைக்கு எடுக்கப்பட்டது.
குறித்த மெய்பாதுகாவலருக்கு கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இதன்போது குறித்த சந்தேக நபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 12 ம் திகதி திங்கட்கிழமை வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.