டெல்;டா வைரஸ் குறித்த உண்மையான உத்தியோகபூர்வ தகவல்களை அரசாங்கம் வெளியிடுவதில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதன் மூலம் அரசாங்கம் உண்மை நிலவரத்தை மறைக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.
பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகமும் தகவல்களை மறைக்கின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறான முடிவுகளை மூடியகதவுகளின் பின்னால் எடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் தரவுகளை பகிரங்கப்படுத்துவதில்லை என தீர்மானித்தால் அதிகாரிகள் அதற்கான காரணங்களை வெளியிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இல்லாவிட்டால் முழு நாட்டிற்கும் பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.