பிரேமலால் ஜயசேகரவின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க தீர்மானம்!

285 0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 07 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தீர்மானித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நபர் ஒருவரை கொலை செய்ய குற்றச்சாட்டில் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்தது.