கட்டுநாயக்க விமான நிலையத்தில், பயணிகளுக்கு பரிசோதனை செய்து மூன்று மணித்தியாலத்திற்குள் பரிசோதனை அறிக்கையை பெறக்கூடிய வகையில் ஆய்வகம் ஒன்றை, எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் அமைப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
அத்துடன், சுற்றுலாத்துறை சார் ஊழியர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.