இலங்கைக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவில்லை – சன்ன ஜெயசுமன

207 0

இலங்கைக்கு ஒருதொகை தடுப்பூசிகள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

நாட்டில் தங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு செலுத்துவதற்காக தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

எனினும் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.