இலங்கையில் தனியார் துறை பணியாளர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தொழிலமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி தற்பொழுது காணப்படும் ஆகக் குறைந்த சம்பளத் தொகை யான 10,000 ரூபாவை 12,500 ரூபாவாகவும்,
ஆகக் குறைந்த நாள் சம்பளத் தொகையான 400 ரூபாவை 500 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக விதிக்கப்பட்ட எந்தவொரு தடைக்கோ அல்லது கட்டுப்பாடுகளுக்கோ உட்படாது என்றும், அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும் சட்டமா அதிபர் சட்டரீதியான சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும், இதற்கமைய குறித்த சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பது தொடர்பிலும் இங்குக் கலந்துரையாடப்பட்டது.