ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு பொலிஸார் காரணமில்லை- சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதே குற்றம்சாட்டவேண்டும்- சரத்வீரசேகர

247 0

ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் ஒடுக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அமைச்சர் சரத்வீரசேகர சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சுகாதாரதேவைகளிற்காகவே கைதுகள் இடம்பெறுகின்றன அரசியல் நோக்கங்களிற்காக இல்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் காலத்திற்கு காலம் சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகின்றார்,சில நாட்களிற்கு முன்னர் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டார் ஆர்ப்பாட்டங்களை அவர் தடை செய்தார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியபடி பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.