இந்தியாவின் அக்னி ஐந்து அணுவாயுத இயலுமைக் கொண்ட ஏவுகணைச் சோதனையை அடுத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கருத்துமோதல்கள் இடம்பெறுகின்றன.
இந்த சோதனை வெற்றியளித்ததை அடுத்து, சீனாவிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவே இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டதாக இந்தியாவின் சில ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த சீனாவின் வெளிவிவகார அமைச்சு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தீர்மானத்தின்படி, தெற்காசிய மூலோபாய சமநிலை இந்த சோதனையின் ஊடாக பாதிக்கப்படுவதாக கூறி இருந்தது.
இதனை மறுத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, எந்த ஒரு நாட்டையும் இலக்கு வைத்து அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.