வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டது.
கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்