பசில் ராஜபக்ஷவால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஒன்றரை வருடங்களாக பசில் ராஜபக்ஷ கட்சிக்குள் உயர் பதவியிலிருந்தார்.
இது குறித்து பொதுமக்களே தீர்மானம் எடுங்கள், நாங்கள் நினைக்கும் அளவுக்கு புதிய நிதி அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள பசில் ராஜபக்ஷவால் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது
இந்த நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தோற்று விட்டனர் என பொதுமக்களே உணர்ந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.