தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுதராதரப் பத்திர உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அத்துடன், கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் இதனை இன்று (09)தெரிவித்துள்ளார்.