அ.தி.மு.க.வால் தான் பா.ஜனதா தேர்தலில் தோற்றது என்று தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்வது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள குருவம்மாபேட்டை கிராமத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பா.ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பெருவாரியான பொதுமக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை, நாம் எடுத்த முடிவுகள் ஆகியவையே நம்முடைய தோல்விக்கு காரணம் ஆகி விட்டது.
தேர்தலில் நாம் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் பா.ஜனதா கூட்டணி தான். இதனால் நாம் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக இழந்துவிட்டோம்’ என்றார்.
இந்த நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டுக்கு தமிழக பா.ஜனதா பதில் அளித்துள்ளது. அ.தி.மு.க.வால் தான் பா.ஜனதா தேர்தலில் தோற்றது என்று தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சி.வி.சண்முகத்துக்கு பதில் அளித்து கே.டி. ராகவன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘உங்களால் தான்’ என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.