குருநாகலில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்!

195 0

குருநாகல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்று வருகின்றது.

காலை 8.30 மணியிலிருந்து மாலை 3.00 வரையிலும் குறிப்பிட்ட அரச வைத்தியசாலைகளில் தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுப்பட்டு வருகின்றது.

குருநாகல் பிரதான வைத்தியசாலை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலை, கல்கமுவ தள வைத்தியசாலை, தம்பதெனிய தள வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.