நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நிவாரணங்களை விரைவாக வழங்க ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று பெல்லன்வில விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதை குறிப்பிட்டார்.
நாட்டின் முழு பொருளாதாரத்தையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
அதன் பிரதிபலன் விரைவில் கிடைக்க பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.