வடமாகாண சபையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களில் பல நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் கிடப்பில் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினர்களான வி.சிவயோகம், க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகியோரோ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் இந்த ஆண்டுக்கான இறுதி அமர்வாக 74ஆம் அமர்வு பேரவை செயலகத்தின் இன்று இடம்பெற்றது.
அதன்போதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
வட மாகாண சபை உருவாக்கப்பட்டு 3 வருடங்களில் 337 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனினும் பெருமளவு தீர்மானங்கள் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தநிலையில், எனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்து, நடவடிக்கை மேற்கொள்ள கூடியவை தொடர்பாக ஆராயும் பொருட்டு விசேட குழு ஒன்றை நியமிக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.