ஜேர்மனியில் இந்து கோவில் ஒன்றின் ஐயர் தலைமறைவு

239 0

ஜேர்மனியில் உள்ள இந்து கோவில் ஒன்றின் ஐயர் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த குறித்த ஐயர் ஜேர்மனியில் இரண்டு வருடங்கள் பணி புரிவதற்காக சென்றுள்ளார்.

பதினைந்து மாதங்கள் அங்கு பணிபுரிந்த நிலையிலேயே அவர் நேற்றிலிருந்து தலைமறைவாகியிருப்பதாக தெரியவருகின்றது.

மேலும், சிசிரிவி கமராவினையும் அதனை இணைக்கும் கருவியினையும் அவர் எடுத்துச் சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.