முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட அம்பாள்புரம் பகுதியில் சட்டவிரோத இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாவி புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் குறித்த சட்டவிரோத இடியன் துப்பாக்கியையும் சட்டவிரோதமாக இடியின் துப்பாக்கியை வைத்திருந்த நபரையும் கைது செய்து மாங்குளம் காவற்துறையினர் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்