கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக பதற்றம்

247 0

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தற்​போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில், பொல்துவ சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த ​போது,  இன்றுக்காலை கைது செய்யப்பட்ட 33 பேரும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அவர்களில் சிலரை, தனிமைப்படுத்த நிலையங்களுக்கு பொலிஸார் அழைத்துச் செல்வதற்கு முயன்றுள்ளனர். இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.