முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி 29 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (07) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
விவசாய தொழிலையே நம்பி வாழ்ந்து வரும் இந்த குடும்பத்தில் விவசாய நடவடிக்கையின் போது மின்சார கசிவு காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.