யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப் பங்களிப்பில் தமிழகத்தின் மண்டபம் முகாமில்  வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களுக்கான இடர்கால உதவி.

524 0

தமிழகத்தின் மண்டபம் முகாமில் நீண்ட காலமாக பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வறுமையோடு வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களுக்கான இடர்கால உதவி 07.07.2021 அன்று வழங்கப்பட்டது. யேர்மன் நிதி உதவியில் 200 குடும்பங்களுக்கு,பெறுமதியான உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதுவரை இடர்கால உதவியினை பெறமுடியாத நிலையில் இருந்த மக்களுக்கு இவ்வுதவியானது பேருதவியாக அமைந்திருந்தது.

இவ்வுதவிக்கான நிதி உதவியினை வழங்கிய யேர்மன் வாழ்தமிழ் மக்களுக்கு மண்டபம் முகாமில் வாழுகின்ற மக்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.