மாத்தளையில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தல்….

204 0

மாத்தளை மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஹரஸ்கம கிராமம் மற்றும் அகலவத்த கிராமம் ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களை சேர்ந்த 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.