கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்த கோரிக்கையின் பிரகாரமே சந்திப்புக்கு திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை, தமது கட்சிக்கான ஒதுக்கீடுகள் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது