அப்போது தலாய்லாமா கூறியதாவது:-
இந்தியாதான் எனது வீடு என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன்.
நான் திபெத்தில் பிறந்தேன். ஆனால் என் வாழ்வின் பெரும்பகுதி இந்த நாட்டில்தான் கழிந்திருக்கிறது. நான் இந்திய அரசின் விருந்தினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
நான்தான் இந்திய அரசின் மிக நீண்ட கால விருந்தினர் என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் இந்த விருந்தினரால் எந்தப் பிரச்சினையும் வராது.
இந்தியாவில் உள்ள மத நல்லிணக்கம் குறிப்பிடத்தக்கது. இங்கு பத்திரிகை சுதந்திரம் இருக்கிறது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அகிம்சையையும், கருணையையும் இந்தியா ஊக்குவிக்கிறது. இது இந்தியர்களின் உள்ளார்ந்த மதிப்புகள் ஆகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டுள்ள இந்த நாடு மத நல்லிணக்கத்துக்கு சரியான உதாரணம் ஆகும். இதற்கு அரசியல் காரணங்கள் கிடையாது. இது மக்களால் ஆனது.
மத நல்லிணக்கத்துக்கு இந்தியாவை பிற நாடுகள் பின்பற்றவேண்டும்.
இந்திய மருத்துவர்கள் தங்கள் கடமையை ஆற்றுகிறபோது, சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
என் பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைவருக்கும் நன்றி.
நான் குறைந்தது 110 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.