ஆபத்தான லெம்டா வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை!

201 0

தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள லெம்டா என்ற கொரோனா வைரஸ் திரிபு இலங்கையில் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது ஒரு புதிய வகையான திரிபு. இதுகுறித்து இன்னும் உலக சுகாதாரஸ்தாபனம் உத்தியோகபூர்வமான தகவல் எதனையும் வழங்கவில்லை.

எவ்வாறாயினும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைவரும் நபரொருவர், நோய் அறிகுறிகளை வெளிக்காட்டாத முடியாதவராக சமூகத்துக்குள் பிரவேசிப்பாராக இருந்தால்,  அவர் ஊடாக இந்த வைரஸ் திரிபு இலங்கையில் பரவும் சாத்தியங்கள் உள்ளன.

இதுதொடர்பாக அவதானமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்