ழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் மட்டும் நேற்று 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 65 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று 288 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே, 65 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் 16 சிறுவர்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தவிர, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்து 5 நாட்களேயான சிசுவும் கொரோனா தொற்றுக்கு இலக்கானமை கண்டறியப்பட்டுள்ளது.
காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறையில் இருவருக்கும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்குமாக யாழ். மாவட்டத்தில் மட்டும் நேற்று 64 பேருக்கும் மன்னார் பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.