அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வைத்துள்ளதால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஓஹியோ மாகாணத்தின் சின்சின்னாட்டி நகரில் உள்ள பூங்கா ஒன்றில் டீன் ஏஜ் வயதுடைய 400 பேர் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் 16 மற்றும் 19 வயதுடைய 2 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
இது திட்டமிடப்பட்ட தாக்குதலா என்பது பற்றி தெரியவரவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் முதல் 5 மாதங்களில் 8,100 பேர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் கொல்லப்பட்டு உள்ளனர் என வாஷிங்டன் போஸ்ட் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.