தென்னிந்தியாவில் முதல் யூடியூப் சேனலாக 1 கோடி சந்தாதாரர்களை கடந்து வில்லேஜ் குக்கிங் சேனல் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு தொடங்கி, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பலரும் சமையல் தொடர்பான யூடியூப் சேனல்தான் தொடங்கியுள்ளனர். இதில் முன்னணியில் உள்ள சேனல்தான் வில்லேஜ் குக்கிங் சேனல்.
மொத்தம் 5 பேர் கொண்ட இந்த சேனல், தமிழகத்தில் மிகவும் பிரபலம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இவர்களுடன் இணைந்து சமைத்து, சாப்பிட்டு மகிழ்ந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. அதிலிருந்து இந்திய அளவில் பிரபலமான சேனலாக வில்லேஜ் குக்கிங் சேனல் உருவாகியுள்ளது.
ஒவ்வொரு முறை சமைக்கும்போதும், இவர்களுடைய கிராமத்து பேச்சு முறை மக்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த சேனலை தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி, சமையல்காரர்கள் குடும்பம் நடத்துகிறது.
சுப்பிரமணியன் வணிகத்தில் எம்.பில் மற்றும் முத்துமணிக்கம் கேட்டரிங் படித்து இருந்தாலும் அவர்கள் தங்கள் தாத்தாவிடம் இருந்து சமையல் கற்றுக்கொண்டு, தாயின் வழிகாட்டலை மட்டுமே பின்பற்றுவதாக கூறுகிறார்கள்.
தற்போது தென்னிந்தியாவில் முதல் யூடியூப் சேனலாக 1 கோடி சந்தாதாரர்களை கடந்து வில்லேஜ் குக்கிங் சேனல் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த சாதனையைக் கொண்டாடும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 10 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளனர். இது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆகையால் பலரும் இந்த யூடியூப் சேனலுக்கு பாராட்டு தெரிவிக்க, டுவிட்டர் தளத்தில் #VillageCookingChannel என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.
மேலும், தங்களுடைய வளர்ச்சி எப்படி தொடங்கி தற்போது எந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம் என்பதையும் வீடியோவாகப் பேசி வெளியிட்டுள்ளனர். அதை பலரும் பகிர்ந்து இந்த யூடியூப் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.