இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேற்கு கிராம சேவகர் பிரிவும்
மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும்
களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடை காவல்துறை அதிகாரப்பிரிவின் புஹாபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபட தோட்டம் ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காவல்துறை அதிகாப்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.