இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் செயற்திறன் ஆய்வாளர் சனத் ஜயசுந்தரவிற்கு சர்வதேச கிரிக்கட் பேரவையின் மோசடி எதிர்ப்பு தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது.
அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடி எதிர்ப்பு விதிகளை மீறியதாக கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு அனைத்து வகையான கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கும் 7 ஆண்டுகாலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவர் அந்நாட்களில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவருக்கு கையூட்டல் வழங்க முற்பட்டதாகவும், சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் புள்ளிவிபர முன்னேற்றங்கள் குறித்து முறையற்ற செல்வாக்கினை செலுத்த முயற்தாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்த தீர்ப்பாயத்தின் விசாரணையில் அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.