நுவரெலியா நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்த சிறுவர் இல்லத்தில் 8 சிறார்களுக்கு ஏற்கனவே கொவிட் தொற்று இருந்தது. இதனால் அங்கு 40 சிறார்களும், அலுவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் அங்கு மொத்தமாக 37 சிறார்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகி இருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிறுவர் இல்லத்தின் 8 நிர்வாக அதிகாரிகளுக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, கொட்டகலை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 25 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொட்டகலை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கே.சுதர்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் 119 பேருக்கு பிசிஆர் எடுக்கப்பட்டதாகவும் அதில் 25 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.