கொவிட் நோயிலிருந்து மீண்ட தோர் சிங்கத்துக்கு நியூமோனியா!

193 0

கொவிட் நோயால் பீடிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்த தெஹிவளை மிருக காட்சிசாலையின் ‘தோர்’ என்ற சிங்கம், நியூமோனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளது.

வனவளத்துறை இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அதன் உடல்நிலை குறித்து தற்போதைக்கு எதனையும் கூற முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.